தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சக்கரபாணி, கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் கொடுக்காத வாக்குறுதிகளும் நிறைவேற்றி பொற்காள ஆட்சி நடத்தியது திமுக. தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தை தொடங்கியது கலைஞர் தான். திமுக ஆட்சியில் – இரண்டு கோடிக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் நெல் ஊக்கத்தொகை வழங்கினோம். இரண்டாயிரம் கோடிகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். பொருள் தரமாக சரியாக கொடுக்க வேண்டும் என தொடர்ந்து ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். புகார் பெட்டிகள் வைத்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்தோம். 17 மாவட்டங்களில் நெல் கொள்முதல் சேமிப்பு இடங்கள் கட்டப்பட்டது.
திமுக – பன்னீர்செல்வம்:
நாங்கள் குடோன்களில் பாதுகாப்பான முறையில் நெல்களை பாதுகாத்தோம். இந்த அரசு நெல்களை முறையாக குடோன்களில் பாதுகாக்காமல் வெளியில் போடப்பட்டுள்ளது.
அவை முனைவர் :
உணவுப் பொருட்களை முறையாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
திமுக – நேரு:
இன்றைய காலங்களில் ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள். சர்க்கரை நோய் குறைய இந்த அரசியை பயன்படுத்துகிறார்கள். நானும் 30 வருடம் உணவுதுறை அமைச்சராக இருந்தேன்.
அமைச்சர் – ஆதவ் :
சில சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அது. சன்னரக அரசி மக்களுக்கு குடுக்கிறோம், சன்ன ரக நெல் விவசாயம் செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளோம். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசிகளை மக்கள் உட்கொள்ள வேண்டும் என எங்களுடைய முதலமைச்சர் கூறியுள்ளார். தார்ப்பாய் மூடி தான் நெல்களை சேமித்து வருகிறோம். அது இந்த அரசு கடந்த அரசு அல்ல பொதுவாகவே உள்ளது. இலவசம் என்பது தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும். இலவசம் என்பது தவறு இது மக்களின் உரிமை. எங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்றால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அந்த அளவுக்கு தரத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




