“மேகதாது அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான்” – டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர, மற்ற எல்லா தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, தமிழ்நாடு: 31வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று செங்கல்பட்டு, கோவளத்தில் நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தெற்கு மாநிலங்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினோம். 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்ற எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் நான் அனைவரும் ஒரே உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.

மேகதாது அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர, மற்ற எல்லா தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சரின் முன்னிலையில் உறுதி அளித்துள்ளேன்; இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான் கட்டப்படும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.