கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் – ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!

கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மத்திய பிரதேசத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் 3 மணி நேரம்…

கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  உடைப்பிரா கிராமத்தைச் சேர்ந்த நேதுரம் அஹிர்வார் எனும் முதியவர் இந்த தீண்டாமைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – கூடுதல் ஹெலிகாப்டர்கள் வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

நியாய விலைக் கடைக்கு சென்று திரும்பிய முதியவரை வழி மறைத்த 2 உயர் சாதியினர் அவரைக் கட்டி வைத்து 3 மணி நேரம் அடித்ததில் அவர் நடக்கும் திறனை தற்காலிகமாக இழந்துள்ளாதக் கூறப்படுகிறது.  அவரை சாதி பெயரைச் சொல்லியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.

முதியவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  குற்றவாளிகள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் துணை ஆய்வாளர் மார்கண்டே மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.