பெண் காவலரின் மகள் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில், பெண் காவலரின் மகள் எடுத்த விபரீத முடிவால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராகப் பணி…

சென்னையில், பெண் காவலரின் மகள் எடுத்த விபரீத முடிவால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராகப் பணி செய்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகக் கணவர் ராமதேவனை பிரிந்து அவருடைய 15 வயது மகளுடன் வருகிறார். அவரது மகள் சென்னை முகப்போரில் உள்ள தனியார்ப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று கலைவாணி வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். அதே வேளையில் அவரது மகள் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாகக் கலைவாணியின் உடன்பிறந்த சகோதரரான குணசேகரன் வீட்டிற்குச் சென்ற போது, வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்திருக்கிறது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக அவரது சகோதரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி அவசர அவசரமாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பவர் பேங்க் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?’

அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டு ஹாலில் விபரீத முடிவு எடுத்து இருந்ததைப் பார்த்துத் துடிதுடித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அக்சராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கீழ்பாக்கம் போலீஸார் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எதற்காக இப்படியொரு முடிவை எடுத்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.