பாளையங்கோட்டையைச் சார்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற அறிவுசார் போட்டியில் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்து தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளார்.
அகில இந்திய கவுன்சில் பார் டெக்னிகல் எஜுகேஷன் [AICTE] சார்பில் பல்வேறு துறைகளில் மிளிரும் இளம் திறமையாளர்களை கண்டு ஊக்குவித்து வருகிறது. AICTE ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிளிரும் இளம் கல்லூரி மாணக்கர்களுக்கு இடையே அறிவுசார் திறமைக்கான இன்டன்ஷிப் நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பாரட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டு அறிவுசார் திறமைக்கான இன்டன்ஷிப் தேர்வுக்கான போட்டியில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரகணக்கான மாணக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த இன்டன்ஷிப் நிகழ்ச்சியில் தனித்திறமையை நிருபிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான மாணக்கர்களில் 431 பேர் தங்களது திறமையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து நெல்லை, பாளையங்கோட்டையை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவி நம்பி நாச்சியார் வெற்றிப்பெற்று ஊக்கத்தொகையும், வெற்றி சான்றிதழும் பெற்றுள்ளார்.
மாணவி நம்பி நாச்சியார் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில் ஹோமியோபதி , யோகா மூலம் ஆங்கில மருத்துவம் இன்றி நம்மை நாமே குணப்படுத்தி கொள்ளலாம் என்ற ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். யோகா தினமும் செய்வதன் மூலம் நம்மை எந்த நோயும் அண்டாது என்பதற்காக பல்வேறு தரகுகளையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இவர் அகில இந்திய கவுன்சில் பார் டெக்னிகல் எஜுகேஷனின் அறிவு சார் திறமைக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பெற்றுள்ளார்.
இராமானுஜம்.கி