‘ரஜினி 170’ படத்தின் தலைப்பு “வேட்டையன்” என அறிவிப்பு!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. …

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 170-வது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.  அனிருத்  இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றிக்கு சமமாக தனது அடுத்த படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‘தலைவர் 170’ அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்படத்தின் இயக்குநரான த.செ. ஞானவேலுவின் முந்தைய படைப்பான ‘ஜெய் பீம்’ சமூகத்தில் பலவித அதிர்வலைகளை உண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஜினியின் பிறந்தநாளான இன்று (டிச. 12) இப்படத்தின் பெயரை அறிவிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதற்கிடையே, நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் தகவல் வெளியாகிவந்தன. 

அந்த தகவலை உண்மையாக்கும் விதமாக படத்தின் பெயரை “வேட்டையன்” என அறிவித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.