புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில், பட்டுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் குடிநீர் வசதி மற்றும் அங்கன்வாடி கட்டடம் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கல்லாக்கோட்டையில் சுமார் 200க்கும்
மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில்
செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடம் 6 மாதங்களுக்கு முன்பு
இடிக்கப்பட்டதாகவும் அன்றிலிருந்து இன்று வரை அங்கன்வாடி மையம் இல்லாமல்
சமையல் கூடத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் அவலம்
நிலவுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதே போன்று தங்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கப்படாத்தைக் கண்டித்தும் பட்டுக்கோட்டை கந்தர்வக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அருகே குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: