கோபிசெட்டிபாளையத்தில் 238 தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!

கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்துதுறை சார்பில். தனியார் பள்ளி வாகனங்களுக்கான சோதனை நடைபெற்றது – இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 238 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் செயல்படும்,…

கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்துதுறை சார்பில். தனியார்
பள்ளி வாகனங்களுக்கான சோதனை நடைபெற்றது – இதில் 30 பள்ளிகளை
சேர்ந்த 238 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் செயல்படும், 30 தனியார் பள்ளிகளில் இயக்கபட்டு வரும் வாகனங்கள் குறித்த ஆய்வு, தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மேலும், 30 தனியார் பள்ளிகளில் இயக்கப்பட்டு வரும் 238 வாகனங்கள் ஆய்விற்க்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறை படி வேக கட்டுப்பாட்டு கருவி,
அவசரகால வழி, வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள்
பொருத்தப்படுதல் போன்றவற்றை ஆராய்ந்தனர். மேலும், முதலுதவி உபகரணங்கள்
உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பதை, கோபி கோட்டாட்சியர் திவ்ய பிரியதர்சினி, துணை ஆட்சியர் காயத்திரி, வட்டார போக்குவரத்துதுறை அலுவலர் (பொறுப்பு) சித்ரா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.