கர்நாடக முதல்வராக சித்தராமையா…துணை முதல்வராக D.K.சிவக்குமார் பதவியேற்பு!

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக D.K.சிவக்குமார்  மற்றும் 8 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.  சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ…

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக D.K.சிவக்குமார்  மற்றும் 8 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. 

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்றது.  முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து  துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். தொடர்ந்து பரமேஷ்வரா, முனியப்பா , கே.ஜி.ஜார்ஜ் எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே , ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற இந்த  பதவியேற்பு விழாவில் மைதானத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் , மநீம தலைவர் கமல்ஹாசன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாஹ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோர் தற்போது வரை வருகை தந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.