ரம்ஜான் நாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் ’மாவீரன்’ படக்குழு!!

ரம்ஜான் பண்டிகையான நாளை புதிய அப்டேட்டை வெளியிடப்போவதாக சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படக்குழு அறிவித்துள்ளது. மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி…

ரம்ஜான் பண்டிகையான நாளை புதிய அப்டேட்டை வெளியிடப்போவதாக சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படக்குழு அறிவித்துள்ளது.

மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது ரசிகர்கள் குஷியாகினர்.

இதையும் படியுங்கள் : ஐதராபாத் அணிக்கு எதிராக அபார பந்துவீச்சு – சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு!

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் ’சீன் ஆ சீன் ஆ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

https://twitter.com/ShanthiTalkies/status/1649426005159755776?t=IdbI4slSqV0Kzanws-f6Vw&s=08

இந்நிலையில், “Getting Ready for Tomorrow” என்று மாவீரன் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. படத்தின் காட்சியை எடிட் செய்வது போன்று பதிவிட்டுள்ள படக்குழு, நாளை புதிய அப்டேட்டை வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.