ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இதையும் படியுங்கள் : பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!
அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கத்தில் அடித்து ஆடினாலும், பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








