பிரம்பால் அடித்த ஆசிரியை., காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.!

வேலூர் அருகே அரசு பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி பிரம்பால் ஆசிரியை தாக்கியதால், காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு…

வேலூர் அருகே அரசு பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி பிரம்பால் ஆசிரியை தாக்கியதால், காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியரயை தீபலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 ஆம் தேதி 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடத்தை ஸ்கெட்ச் ஆல் எழுதி வர சொல்லி உள்ளார். மாணவிகள் பெண்ணால் எழுதி வந்ததால் மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மாணவிகள் அனைவரையும் பிரம்பால் ஆக்ரோஷமாக தாக்கியும் உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதில் 3 மாணவிகளுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில் விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக கண்மூடித்தனமாக தங்கள் மகள்களை தாக்கிய ஆசிரியை-யை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.