முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.