தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும் மத்திய அரசுப் பணிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகிய்ல, ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வும், 11 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா ஐபிஎஸ், தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் ஐபிஎஸ் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி ஷானாஸ் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமார் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் கோவை தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஏ.எஸ்.பி சிவராமன் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் டவுன் ஏ.எஸ்.பி சிபின், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு, திருச்சி வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.








