ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதை எதிர்த்து அங்குள்ள பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் முடி திருத்தும் கலைஞர்கள் ஷரியா சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தலிபான் அரசு கூறியுள்ளது. இந்த தடையை மீறினால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி, அவர்கள் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்றும் அதைக் குறைக்கவும் ( trimming) கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில், அனைத்து முடித்திருத்தும் கலைஞர்களுக்கும் இந்த அறிக்கையை தலிபான் அனுப்பியுள்ளது. காபூலில் உள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கும் இந்த மாதிரியான உத்தரவு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.








