தமிழ்நாட்டில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், படிப்படியாக நகர்ப்புற தேர்தல் நடத்தப்படும் என ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தேர்தலை கண்டு பின்வாங்கவில்லை என்றும், தேர்தலை கண்டு அஞ்சியது முந்தைய அதிமுக ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.
31 ஆண்டுகால ஆட்சியில் 18 ஆண்டுகாலம் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தது அதிமுக ஆட்சிதான் என குறிப்பிட்ட அவர், இது மிக பெரிய ஜனநாயக படுகொலை என்றும் தெரிவித்தார்.
தேர்தலை நடத்தவேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாக இருந்தாலும், அதற்கான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.







