பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலையை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் க்வாதரில் (Gwadar) நகரின் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை ஞாயிற்றுக்கிழமை காலையில் குண்டு வைத்து தகர்க்கப் பட்டுள்ளது. இதற்கு பலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பான பலோச் குடியரசுப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு அங்கு தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து க்வாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அப்துல் கபீர் கான் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
’இது பாகிஸ்தான் சித்தாந்தத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஜின்னா தனது இறுதிக் காலத்தை கழித்த பலுசிஸ்தான் வீட்டின் தாக்குதலுக்கு பின்னால் இருந்தவர்கள் தண்டிக் கப் பட்டதை போல இந்த சிலை தகர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பலுசிஸ்தான் மாகாண முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்போதைய செனட் உறுப்பினருமான சர்பிராஸ் புக்தி தெரிவித்துள்ளார்.