முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆரம்பமானது கோடை சீசன்..! குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை . அழகும் கம்பீரமும் சங்கமிக்கும் இடமான இங்கே இயற்கை அதிசயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகளும், மனதைக் கவரும் காட்சியை வழங்கும் சுற்றுலா தளங்களும் உள்ளன. இவற்றை பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பேற்பட்ட சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தினமும் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமானோர் வருகை புரிவர். அதிலும் வார விடுமுறை தினங்களில் வழக்கமான சுற்றுலா பயணிகளை விட உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

அந்த வகையில் இன்று பண்டிகை விடுமுறை என்பதால், தென் இந்தியாவின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்களும் அவரவர் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் ஏராளமான அளவில் காலையிலேயே கடற்கரையில் கூடத்தொடங்கினர். அங்கு காலை சூரிய உதயத்தை குடும்பத்தோடு கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3வது இடம்!

Halley Karthik

குருவாயூரில் நடைபெற்ற புகழ்பெற்ற யானைகளின் ஓட்டப்பந்தயம்

Web Editor

காக்கி சட்டையை கழட்டிட்டு வாண்ணே… சண்டைக்கு அழைத்த ரவுடி மீது வழக்குப்பதிவு

Halley Karthik