முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இதை கண்ட மலை கிராம மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பூர் போலீசார் ஹெலிகாப்டரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரில் வந்த முக்கிய பிரமுகர் பெங்களூரை சேர்ந்த ஆண்மீக குருவும், வாழும் கலை நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்பது தெரிய வந்தது. இந்த ஹெலிகாப்டரில் இவருடன் மூன்று உதவியாளர்கள் மற்றும் ஒரு பைலட் ஆகிய நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் இருந்து திருப்பூர் சென்று அங்கு நடைபெற உள்ள ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் வந்தது தெரிய வந்தது.

இன்று காலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு
ஏற்பட்டிருந்தால், ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் மலை கிராமத்தில் தரை
இறக்கியதாக கெலிகாப்டரை இயக்கிய பைலட் தெரிவித்தார் .

பனிப்பொழிவு சரியாகி இயல்பான வானிலை வருவதற்காக ,சுமார் 40 நிமிடங்கள் உகினியம் கிராமத்திலேயே காத்திருந்து, பின்னர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் புறப்பட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி சென்றது. ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் கடம்பூர் மலைப்பகுதி மழைவால் கிராம மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்

EZHILARASAN D

4.8 கோடி பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல்!

Halley Karthik

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

G SaravanaKumar