முக்கியச் செய்திகள் தமிழகம்

”இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது” – சரத்குமார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

Jeba Arul Robinson

வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

Dinesh A

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

G SaravanaKumar