“புயல் வருகிறது! ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவு!” – தனுஷ் அறிவிப்பு

ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவடைந்துள்ளது. புயல் வருகிறது என நடிகரும் இயக்குநருமான தனுஷ் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர்…

ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவடைந்துள்ளது. புயல் வருகிறது என நடிகரும் இயக்குநருமான தனுஷ் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். அதே சமயம் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகின்றார்.

தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே நடித்து இயக்கி வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தனுஷுடன் இப்படத்தில் இணைந்து சந்தீப் கிஷன், எஸ்.ஜெ சூர்யா, செல்வராகவன், வரலக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தயாராகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப் இருந்து வருகின்றது. இந்நிலையில் ராயன் திரைப்படம் முதலில் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற்று வந்ததால் இப்படம் மே இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வந்தன. தற்போது ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவுற்றுள்ளதாக அத்திரைப்படத்தின் இயக்குனரும் கதா நாயகனுமான தனுஷ் தனது X தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.