சரக்கு ரயில்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டவுடன் ரயில்கள் வேகம் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திரமோடி

சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்ட பின்னர், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தை தேநீர் கடை…

சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்கப்பட்ட பின்னர், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் தந்தை தேநீர் கடை நடத்தி வந்தார். அந்த கடையில் மோடி இளம் வயதில் தேநீர் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார். மோடி பிரதமர் ஆனபின்னர்  வத்நகர் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட வத்நகர் ரயில் நிலையத்தை  காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

“வத்நகர் ரயில் நிலையத்தை ஒட்டி பல்வேறு நினைவுகள் என்னுள் தோன்றுகின்றன. புதுப்பிக்கப்பட்ட வத்நகர் ரயில் நிலையும் மிகவும் ஈர்ப்பதாக இருக்கிறது. இந்திய ரயில்வே மீதான மரியாதையும், மதிப்பும் அதிகரித்துள்ளது. இப்போது ரயில்வேயில் பாதுகாப்பு, வேகம், சுகாதாரம், வசதிகள் அனைத்தும் மேம்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் தேவை என்பது, 20ம் நூற்றாண்டு வாயிலாக பூர்த்தி செய்யப்படமுடியாது.

புதிய அணுகுமுறையின் கீழ் ரயில்வேயில் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். ரயில்வேயின் சேவைகளை முன்னெடுப்பதற்காக மட்டும் பணியாற்றவில்லை, ரயில்வேயை ஒரு சொத்தாக முன்னெடுப்பதற்காகவும் பணியாற்றினோம். அதன் பலனைத்தான் இன்று நாம் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.