தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை!

மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்…

மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

மேலும், வழக்கறிஞர்களின் சேம நலநிதியை உயர்த்தி வழங்கவும், வழக்கறிஞர்களையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உத்தரவாதம் கொடுத்தாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.