பத்ம விருதுகள் பெற்ற நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து……!

பத்ம விருதுகள் அறிவிக்கபட்ட நடிகர்கள் மம்மூட்டி, முரளி மோகன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷனும் , நடிகரக்ள் முரளிமோகன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் sri

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ”மத்திய அரசு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள முத்தான மூன்று முத்துக்களான திரு.மம்மூட்டி அவர்களுக்கு “பத்மபூஷன்“ விருது, திரு.முரளிமோகன் அவர்களுக்கு “பத்மஸ்ரீ“ விருது , திரு.மாதவன் அவர்களுக்கு “பத்மஸ்ரீ“ விருது வழங்கி, அவர்களுக்கும், அவர்தம் கையாளுகின்ற கலையையும் கௌரவித்திருக்கிறது.

இந்நிகழ்வு நடிகர் சமூகத்திடையே மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா உலகத்திற்கே பெருமையும், மகிழ்ச்சியையும் கொண்டு சேர்த்திருக்கிறது. இதுகாறும் நடிப்புக்கலைக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட, திருவாளர்கள் மம்மூட்டி, முரளிமோகன், மாதவன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமையுடனும், மனம்நிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. எம் கலை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் விருது பெற்றவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மனம்நிறை வாழ்த்துகளை தெரிவிக்கிறது. இக்கலைஞர்களை, தேர்ந்தெடுத்து நாட்டின் அரிய, பெரிய விருதுகளை வழங்கி பெருமை சேர்த்ததிற்கு மத்திய அரசை வணங்கி நன்றி கூறி, அகமகிழ்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.