திருமணத்தின் போது DJ ப்ளே செய்த பாடல்… மணமகன் செய்த அதிர்ச்சி செயல்!

திருமண விழாவில் டிஜே போட்ட பாடலால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பாடல்கள் போடுவது, நடனம் ஆடுவது என கொண்டாடப்படுவது வழக்கம். அனைவரின் வாழ்விலும் மிகவும் மகிழ்ச்சியான நாளான திருமண நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், டிஜேவின் ஒரு பாடலால் ஒரு திருமண கொண்டாட்டமே தலைகீழாக மாறி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் டிஜே, ரன்வீர் கபூரின் ”சன்னா மெரேயா” என்ற பாடலை ப்ளே செய்தார். இந்த பாடலைக் கேட்ட மணமகனுக்கு அவரின் முன்னாள் காதலியின் நினைவுகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமகன் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த பதிவு இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“DJவின் ஒரு பாடலால் மணமகன் இவ்வளவு பாதிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என ஒருவர் தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர், “இதனால் மணமகளின் நிலைமை என்னவாகும்?” என சோகமாக கூறியிருந்தார். ‘சன்னா மெரேயா’ என்பது பாலிவுட் படமான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.