ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் இதைத் தெரிவித்தார். இந்தப் பாடலுக்கு யுவன்சங்கர்…

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் இதைத் தெரிவித்தார். இந்தப் பாடலுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கான ஹேஷ் டேக்-கை முதலமைச்சர் வெளியிட்டார் என்று அமைச்சர் மெய்யநாதன் சொன்னார்.

https://twitter.com/SMeyyanathan/status/1419612168270405632

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மெய்ய நாதன், வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, எதிர்காலத்தில் தங்கம் வெல்வார் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறினார்.

தமிழகத்தில் 4 ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து 6 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு உலகத்தரமான பயிற்சியளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள் ளதாகத் தெரிவித்த அவர், தடகள வீர்ர் சுபா வெங்கடேசன், வீராங்கனை தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப்பணிக்கான ஆணையை முதலமைச்சர் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.