நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை உட்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கியுள்ளன.
இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவிவருகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் 7வது நாளான இன்றும் பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து அவை கூடியதும் அமளி குறையாததால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் கூடிய அவை கூட்டத்தில் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்த உளவு செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.