மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள் ளன. ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சதாரா, சங்கிலி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள ராய்காட், ரத்னகிரி மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடியும் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.50 லட்சத்தையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந் தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் .
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சதாரா மாவட் டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்.