முக்கியச் செய்திகள் இந்தியா

விமானத்தில் வித் அவுட்டில் வந்த பாம்பு; பயணிகள் அதிர்ச்சி

கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்
பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய்
சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு விமானத்தின் சரக்கு கிடங்கில்
பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக  இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. இந்தனால் அனைவரும் பத்திரமாக இறக்கி
விடப்பட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை
விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பாம்மை கற்ரியதோடு வேறு ஏதேனும் உள்ளதா ஏன ஆராய்ந்து உருதிப்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, டிசிஜிஏ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சூழலில், துபாயிலிருந்து கோழிக்கோடு வருவதற்காக காத்திருந்த பயணி ஒருவர், “துபாய் விமான நிலையத்தில் 7 மணிநேரம் சிக்கித் தவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா, “IX344 துபாய்-கோழிக்கோடு விமானம் 11 டிசம்பர் அதிகாலை 1:45 மணிக்குப் புறப்படும்” என்று தெரிவித்தது. அத்துடன், “உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம். நீங்கள் ஓட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள்” என்று பதிவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்!

எல்.ரேணுகாதேவி

‘எப்பவும் நாங்க அப்படித்தான்..’ தோழிகளை சந்தித்த நடிகை மஞ்சு வாரியர்

EZHILARASAN D

கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்

Jeba Arul Robinson