ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பு… வைரலாகும் வீடியோ!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரவாகி வருகிறது. கேரள மாநிலத்தில் சொகுசு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பாம்புகள் நுழைந்து பயணம் செய்யும்…

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டிற்குள் புகுந்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரவாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் சொகுசு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பாம்புகள் நுழைந்து பயணம் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.  இந்நிலையில்  காசர்கோடு அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு,  ஹெல்மெட்டின் உள் மறைந்திருந்த பாம்புடன் நீண்ட நேரம் பயணம் செய்து வந்துள்ளனர்.  பின், இளைஞர் ண்ட தூரம் பயணம் மேற்கொண்ட நிலையில், வாகனத்தில் மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்து மாட்ட முயற்சி செய்துள்ளார்.

அப்போது ஹெல்மெட்டில் ஏதோ அசைவு ஏற்படுவதை பார்த்துள்ளார்.  உள்ளே ஏதேனும் இருக்குமோ என சந்தேகித்து சோதனை செய்தபோது அதில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  பின் வாகனத்தை நிறுத்தி விட்டு அதில் இருந்த பாம்பை பிடித்து வெளியே விட்டனர்.  இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.