கேரளாவில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகரைக் கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, பூதி வழி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராமிய பாடல் பாடகர் ராதாகிருஷ்ணனுக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியதால் ராதாகிருஷ்ணன் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்’
மந்திரவாதியின் பேச்சை நம்பி, ராதாகிருஷ்ணன் அவரது வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். சுமார் 5 மாதம் ஆன 20 கஞ்சா செடிகளைப் பையில் வைத்து வளர்த்து வந்ததுள்ளார். 5 மாத செடி என்பதால், பூவிலிருந்து வாசம் வெளியில் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், அங்குச் சென்ற கேரள கலால் துறை அதிகாரிகள், ஆய்வு செய்து அங்கிருந்த 20 செடிகளைப் பறிமுதல் செய்ததுடன் ராதாகிருஸ்னனை கைது செய்து, மன்னார் காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.