மழையின் காரணமாகச் சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து 178 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால், அந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
அதுபோலவே, விசாகப்பட்டினம், கொச்சி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலே வட்டமடித்து தாமதமாகத் தரையிறங்கியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி: ‘மது போதையில் வாலிபர் வெட்டி கொலை; போலீஸ் விசாரணை’
இதைப் போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. சென்னையில் நேற்று விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டபோது பயணிகள் கடும் அவதிக்குள்ளானர். இன்றும் அதே நிலை தொடர்ந்ததால் விமான பயணிகள் பலரும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனர்.





