32வது திருமண நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்பதியில் தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று அவர்களது 32-ஆம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தாருடன் அவர் சென்று இருந்தார்.
சிறப்புத் தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.








