உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த இரண்டாவது தமிழர்!!

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டு இளைஞருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சைமுத்து, மலையேற்றத்தில்…

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டு இளைஞருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சைமுத்து, மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டார். தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி எவரெஸ்ட் மலை அடிவார முகாமில் இருந்து ஏறத் தொடங்கி, மே 19- ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து சாதனை படைத்தார். அவருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்த பின்னர் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்மக்கள் ராஜசேகர் பச்சைமுத்துவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சென்னை விமான நிலைய காவல்துறை ஆய்வாளர் பாண்டியன், ராஜசேகர் பச்சைமுத்துவை நேரில் வாழ்த்தினார்.

பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த ராஜசேகர் பச்சைமுத்து, தன்னுடன் 500க்கும் மேற்பட்டோர் மலையேறியதாகவும் ஆனால் அவர்கள் பாதியிலேயே நின்றுவிட்டதாகவும் கூறினார். மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் இல்லாமல் விடாமுயற்சியுடன் இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டால் பல சாதனைகளை படைக்க முடியும் என்றும் ராஜசேகர் பச்சைமுத்து கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.