மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

உலக பிரசித்திபெற்ற மதுரை  மீனாட்சியம்மன் கோயிலின் நீண்டகாலமாக தக்காரக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். மதுரையில் உள்ள  உலக புகழ்பெற்ற  மீனாட்சியம்மன் கோயிலின் 20 ஆண்டு…

உலக பிரசித்திபெற்ற மதுரை  மீனாட்சியம்மன் கோயிலின் நீண்டகாலமாக தக்காரக
இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை
உயிரிழந்தார்.

மதுரையில் உள்ள  உலக புகழ்பெற்ற  மீனாட்சியம்மன் கோயிலின் 20 ஆண்டு காலமாக  தக்காரக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவர் தியாகராஜர் கல்லூரி மற்றும் நூற்பாலையின் தலைவாரக இருந்தது வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவில் கூட கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்துவந்துள்ளார். இவருக்கு வயது 70.

இவர் 2015-ம் ஆண்டு தமிழக அரசிடம் காமராஜர் விருது பெற்றுள்ளார். மேலும் மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராக இவர் இருந்துள்ளார் . இந்த சூழலில் இவரது உடல் கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

காலை முதலே அரசியல் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்ககளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலானது நாளை மதியம் 2 மணிக்கு நல்லநடக்கம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் தக்காரும், தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், மதுரை மக்களின் பேரன்பிற்கு உரியவருமான, கருமுத்து கண்ணன் இயற்கை எய்திய செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

அவர் தென் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் செவ்வனே நடத்தித் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தியவர். அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

அவரது மறைவால் ஆற்றொணாத் துயருற்றுள்ள அவரது இணையர்  உமா கண்ணன் அவரது மகன் ஹரி தியாகராஜனுக்கும் ,  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TThenarasu/status/1660838158051979264

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ..

“ மதுரை  கருமுத்து தி. கண்ணன் இன்று காலை மறைந்தார் என்ற செயதி அறிந்து ஆழ்ந்த அதிரச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். அவருடைய இளம் வயதிலிருந்தே அவரை நான் அறிவேன். சிறந்த பண்பாளர், முன்னோடித் தொழிலதிபர், கல்வியாளர், தமிழ் ஆர்வலர், அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் நீண்ட நாள் தக்கார் என்ற பன்முகங்களைக் கொண்டிருந்த   கண்ணனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு.  அவருடைய மனைவி, மகன், மகள்கள், தங்கை மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்லையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/PChidambaram_IN/status/1660860755993055237

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.