புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள ‘செங்கோல்’, நியாயமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிக்கிறது – உள்துறை அமைச்சர் அமித்ஷா

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள சோழர்கள் காலத்து ‘செங்கோல்’, நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள சோழர்கள் காலத்து ‘செங்கோல்’, நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் அடையாளத்தினை குறிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது அதன் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் மோடி கவுரவிப்பார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதில் ‘செங்கோல்’, நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாகத்தின் அடையாளத்தை குறிக்கிறது. இது அமிர்த காலத்தின் தேசிய அடையாளமாக, மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில் பிரகாசிக்கும். இது புதிய இந்தியா, உலகில் அதன் சரியான இடத்தைப் பெறுவதற்கு சாட்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.

https://twitter.com/AmitShah/status/1661327212866596870?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.