முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி – விடுமுறை அளித்து கொண்டாடும் சவுதி அரசு

உலக கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக சவுதி அரசு இன்று தேசிய விடுமுறை அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றில் நேற்று உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியா அணியை எதிர்கொண்டது. லுசைல் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 10வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்டி அதிரடியாக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆட்டத்தின் முதல் பாதியில் சவுதி அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தினர். சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த இரண்டு கோல்களும் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது.

ஆட்டத்தை சமன் செய்ய அர்ஜென்டினா அணி முயன்றது. ஆனால் இறுதி வரை அவர்களால் கோல் அடிக்க முடியாததால், 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அபார வெற்றி பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை 36 போட்டிகளில் தொடர்ச்சியாக அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த அணி தற்போது முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து: 2-1 கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர வைத்த சவுதி அரேபியா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Web Editor

10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

Gayathri Venkatesan

போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை

Halley Karthik