முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: 2-1 கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர வைத்த சவுதி அரேபியா

இன்று அர்ஜென்டினா, சவுதி அரேபியா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. அட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடினர். பின் அர்ஜென்டினா அணிக்கு ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. இந்த பெனால்டியை சரியாகப் பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதன் பின் சவுதி அரேபியா அணி வீரர்கள் பதிலடி கொடுக்க முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 1-0 என அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது. அதன் பின் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியினர் ஆதிக்கம் செலித்தி அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இவர்களின் இந்த கோல், ஆட்டத்தைச் சூடுபிடிக்கச் செய்தது.

இதற்கு அர்ஜென்டினா அணி எவ்வளவு போராடியும் கோல் ஏதுவும் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட முடிவில் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்

G SaravanaKumar

பைக்கிலிருந்த பணம் திருட்டு; சிசிடிவி காட்சியால் திடுக்…

Halley Karthik

10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D