திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளளார்.
சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலுரை வழங்கிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட 8 ஆயிரத்து 760 கோடி ரூபாய் கூடுதலாக, கிடைத்துள்ளது என்றார். அதாவது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 970 கோடி ரூபாய் வருவாயாக பெறப்பட்டுள்ளது என்றும், வணிகவரித்துறையில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு, தீவிர கண்காணிப்பு மற்றும் வணிகர்களுடனான கனிவான அணுகுமுறையின் விளைவாகவே இது சாத்தியமானதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பதிவுத் துறையிலும் அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 3 கோடியே 270 லட்சம் ரூபாய் அதிகரித்து, 2021-22-ம் ஆண்டில் 13 ஆயிரத்து 913 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். பதிவுத் தவறுகளும், ஆவணப்பதிவுகளும் அதிகமாக இருந்த பதிவுத்துறையில் வருவாயைப் பெருக்குவது சாத்தியமா? என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்ததாக விளக்கமளித்த அமைச்சர் மூர்த்தி, திமுக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு அறிவு சார்ந்த செயல் திட்டங்களின் காரணமாக பதிவுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.