கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது, அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ் நிகழ்வு அழைப்பு வரும்ேோபோது தமிழிசை அங்கே இருப்பேன். ஒரு ராமசாமி மட்டும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்யவில்லை. இங்கே உள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தமிழுக்கு தொண்டாற்றி உள்ளார். ஆன்மிகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. எல்லா மடங்களுக்கும் செல்லும் பழக்கம் இருக்கிறது. அங்கு என்ன பழக்கங்கள் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். அங்கு நடந்த சம்பவங்களை மாற்றி எழுதுகின்றனர்.
கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது, அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது. நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. பணமதிப்பிழப்பின் போது எந்த பிரச்னையும் தனக்கு வரவில்லை. மோடி எங்களுக்கு முன்பே சொல்லவுமில்லை, எங்களிடம் கறுப்புப் பணமும் இல்லை.” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழக அரசு ஆன்மிக குருக்களை அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர்கள் என்றால், அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்தான். கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆளுநர்கள் எல்லாரும் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். தமிழக பிரச்னையை நான் பேசவில்லை. துணைவேந்தர்கள் நியனமத்தில் அனைவர் பங்கும் இருக்க வேண்டும். அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்பதற்காகதான் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர்.
தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதேபோல, ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநரும், முதலமைச்சருக்கும் சுமுகமான உறவாக இருக்க வேண்டும். ஆளுநர்களும், முதலமைச்சரும் இணைந்து பணியாற்றும் போது மக்கள் பலன் பெறுவார்கள். எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றும் போது, அது வருங்கால சந்ததிக்கு பலனளிக்காது. மசோதாக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது.” என்றார்.”









