மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை 22 நாட்கள்…

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறுகின்றது. தினந்தோறும் கேள்வி நேரம், 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள், மானியகோரிக்கை மீது அமைச்சர்கள் பதிலுரை ஆகியவை இடம் பெறுகின்றன. முதல் நாளான இன்று நீர்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத் தொடரில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்த விவாதங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அவையில் பிரச்னையை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் என்று கூறப்படுகிறது. கேள்வி நேரம் மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.