சென்னையில் கடந்த சில நாட்களாக சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றும் 7வது நாளாக போராட்டம் நடத்தினர்.
தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்துள்ள ஆசிரியர்கள் கோஷமிட்டபடி போராட்டத் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் ஆசிரியர்கள் மறுக்கவே காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.







