அரசுப் பள்ளி மாணவர்களை ஆடிட்டராக்கும் திட்டம் தொடக்கம்!

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களை ஆடிட்டர்களாக உருவாக்கும் நோக்கில், “ஆயிரம் விளக்கு ஏணி திட்டம்” தொடக்க விழா நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆயிரம்விளக்கு சட்டமன்ற…

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களை ஆடிட்டர்களாக உருவாக்கும் நோக்கில், “ஆயிரம் விளக்கு ஏணி திட்டம்” தொடக்க விழா நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர்  இன்னொசென்ட் திவ்யா, இத்திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

2021-2022 ஆம் கல்வியாண்டில், ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த மாணாக்கர்களில், சிறப்பு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 மாணாக்கர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் முழுமையான இலவச பட்டயக்கணக்கர் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.

KEW Academy, Chennai Rotary Carnatic, Max Medical Foundation ஆகிய தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய இன்னொசன்ட் திவ்யா, “தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தை துல்லியமாகப் புரிந்து, ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் முயற்சியால், இத்திட்டத்தின் முதல் அடியை ஆயிரம்விளக்கு தொகுதியில் எடுத்து வைத்திருக்கிறது” என்றார்.

ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு, ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி கழக செயலாளர் மா.பா.அன்புதுரை, மாணவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.