மேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 பாட்டில் மதுபானங்கள் அழிப்பு!

மேலுாரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை வருவாய்த்துறை முன்னிலையில் மதுவிலக்கு காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தனர். மதுரை மாவட்டம், மேலுார் அருகே கருங்காலக்குடி, கருப்பாயூரணி பகுதிகளில்…

மேலுாரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை வருவாய்த்துறை முன்னிலையில் மதுவிலக்கு காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தனர்.

மதுரை மாவட்டம், மேலுார் அருகே கருங்காலக்குடி, கருப்பாயூரணி பகுதிகளில் பல்வேறு வழக்குளில் 3000-க்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவாபிரசாத் உத்தரவின் படி மேலுார் அருகே மலம்பட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதி வட்டாட்சியர் செந்தாமரை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளவரசு தலைமையில் மேலுார் மதுவிலக்கு காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்தனர்.  பாட்டில்களை விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.