தஞ்சாவூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 சவரன் நகையை கண்டெடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ரெப்கோ வங்கியில் அடகு வைத்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 6 சவரன் நகையை திருப்பி விட்டு வந்துள்ளார். அப்போது செல்லும் வழியில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கும் போது நகையை தவறவிட்டு விட்டார்.
இந்நிலையில் அந்த நகையை மகர்னோன்பு சாவடியைச் சேர்ந்த செய்யது காதர் என்பவர் கண்டெடுத்து அதனை தஞ்சை கீழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை அடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸார், நகையை தொலைத்த பிரபாகரனை அழைத்து நகையை ஒப்படைத்தனர்.
மேலும் நகையை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த செய்யது காதரின் நேர்மையை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
ம. ஸ்ரீ மரகதம்







