சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.43,400 விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கவும்: ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுப்பேன்- ராஜமௌலி
கடந்த வாரங்களில் இறங்குமுகத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 43,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.50 உயர்ந்து ரூ.72.00 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,400-க்கும், கிராம் ரூ.5,425-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.72.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700-க்கும் விற்கப்படுகிறது. இது இல்லதரசிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது.








