முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

மல்லிகை ரூ.1,500, பிச்சி 1,000.. நெல்லையில் பூக்கள் விலை விர்ர்ர்!

நெல்லையில் பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ, கிலோ 1500 ரூபாய்க்கும், பிச்சிப் பூ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நெல்லையில் கொரோனா ஊரடங்கு, ஆடி மாதம் என பூக்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சி நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடக்கத் தொடங்கியுள்ளது. நாளை, வரலட்சுமி பூஜை, மற்றும் 21-ஆம் தேதி கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாப்படுகிறது.

இதனையொட்டி கேரளாவிற்கு நெல்லையில் இருந்து அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். இதன் காரணமாக, நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள், நெல்லை மலர் சந்தையில் குவிந்துள்ளனர் .

இன்றைய நிலவரப்படி, நேற்று கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, 1000 ரூபாய் உயர்ந்து 1500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப் பூ 400 ரூபாய் உயர்ந்து 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சம்மங்கி 200 ரூபாய் இருந்து 520 ரூபாயாகவும், பன்னீர் ரோஸ், அரளி ஆகிய பூக்கள் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும் பூக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாளை பூக்களின் விலை அதிகரிக் கும் என்றும் கூறப்படுகிறது.

 

Advertisement:
SHARE

Related posts

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சிறப்பு ரயில்!

Gayathri Venkatesan

ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Nandhakumar

பிளஸ் டூ மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோவில் கைது

Saravana Kumar