தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவை யில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு நியூஸ் 7 தமிழ் மூலம் தொடர்…

பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவை யில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு நியூஸ் 7 தமிழ் மூலம் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, போதையில்லா பதனீரை விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தென்னை மரத்தில் தொழில்நுட்பத்துடன் நீரா பானம் இறக்க வேண்டும் எனக்கூறிய அவர், நீரா பானத்தை பாட்டிலில் அடைத்து அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம் என்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றும் யோச னை தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நீரா பானம் தயார் செய்ய முன்வருபவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறி னார்.

நியூஸ் 7 தமிழ் மூலம் முன்னெடுக்கப்பட்ட பனை மரங்கள் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் அண்மையில் வெளியிடப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறை வேற்றப் பட்டிருந்தது. நிறைவேற்றப்படாமல் இருந்த ஒரே ஒரு கோரிக்கையான பனை ஏறும் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கும் கோரிக்கையும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.