பொங்கல் பெருவிழாவால் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போல காட்சியளித்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ”பொங்கல் பண்டிகை தமிழர்களின் பெருமையான
பண்டிகை. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த பண்டிகை தமிழர்களால் உற்சாகமாக
கொண்டாடபட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், நமது வீரத்தையும் இந்த பண்டிகை வெளிக்காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை
கொண்டாடப்படுகிறது. பொங்கல் பெருவிழாவையொட்டி நடைபெற்ற கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மூலம் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போலவே காட்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.