“இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை”!- ராமதாஸ்

ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இல்லாதது குறித்து பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் சார்பில் கிண்டி ஆளுநர் மாளிகையில்…

ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இல்லாதது குறித்து பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் சார்பில் கிண்டி ஆளுநர் மாளிகையில் வைத்து ஆண்டுதோறும் விருந்து உபரிசப்பு அளிக்கப்படும். கடந்த ஆண்டிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான விருந்து உபரிப்பு விழாவிற்கான ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இல்லாமல் இந்திய அரசின் இலட்சினையோடு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் விழாவினை திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. இந்நிலையில் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழ் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/drramadoss/status/1613560588504006658?t=-4-7ikdE4m0dq-3o4SxoeQ&s=08

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை… ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை… தமிழ் மாதம் இல்லை… தமிழ்நாடு இல்லை…. தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை! என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.